• +91 93459 73432
  • info@srisrinivasatrust.in

எங்களை பற்றி

ஸ்ரீ ஸ்ரீனிவாசா அறக்கட்டளை

ஸ்ரீ சீனிவாசா அறக்கட்டளையானது துர்முகி ஆண்டு புரட்டாசி 5ம் நாள்(21.09.2016) 2016-ம் ஆண்டு டிரஸ்ட் சட்டம் 110/1882 சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீ சீனிவாசா அறக்கட்டளையின் நோக்கங்கள்:

இந்திய திருநாட்டின் சட்ட திட்டங்களுட்பட்டு நாட்டின் சுதந்திரத்தை, ஒற்றுமையையும், கண்ணியத்தையும் பேணி பாதுகாக்கவும், நிலை நிறுத்தவும் பாடுபடுவது.

இயற்கை சீற்றம் மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்தின் அடிப்படையில் நிவாரண உதவி வழங்குவது.

ஏழை எளிய மக்களுக்கு உதவிட இலவச மருத்துவமனை துவங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம், மற்றும் இலவச கண் மருத்துவ முகாம், மற்றும் இலவச மருத்துவ சேவைகள் செய்தல்.

ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக காப்பகங்கள் அமைதல் மற்றும் அரசின்காபகங்களுக்கு தேவையான உதவிபுரிதல்.

இந்த டிரஸ்ட்-இன் மூலம் பொதுமக்களின் நன்கொடை பெற்று கோயில் கட்டுவது, திருப்பணி செய்வது, கோயில் விழாக்கள் நடத்துவது அன்னதானம் செய்வது மற்றும் அணைத்து தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவது.

resource

ஸ்ரீ ஸ்ரீனிவாசா அறகட்டளை உறுபினர்கள்

திரு. மா. பெருமாள், நிறுவனர் மற்றும் தலைவர்
திருமதி. கோ. சாந்தி, செயலாளர்