• +91 93459 73432
  • info@srisrinivasatrust.in
  • mainslider

ஸ்ரீ சீனிவாசா அறக்கட்டளை

ஸ்ரீ சீனிவாசா அறக்கட்டளையானது துர்முகி ஆண்டு புரட்டாசி 5ம் நாள்(21.09.2016) 2016-ம் ஆண்டு டிரஸ்ட் சட்டம் 110/1882 சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீ சீனிவாசா அறக்கட்டளையின் நோக்கங்கள்:

1. இந்திய திருநாட்டின் சட்ட திட்டங்களுட்பட்டு நாட்டின் சுதந்திரத்தையும், ஒற்றுமையையும், கண்ணியத்தையும் பேணி பாதுகாக்கவும், நிலை நிறுத்தவும் பாடுபடுவது.
2. இயற்கை சீற்றம் மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்தின் அடிப்படையில் நிவாரண உதவி வழங்குவது.
3. ஏழை எளிய மக்களுக்கு உதவிட இலவச மருத்துவமனை துவங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம், மற்றும் இலவச கண் மருத்துவ முகாம், மற்றும் இலவச மருத்துவ சேவைகள் செய்தல்.
4. ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக காப்பகங்கள் அமைதல் மற்றும் அரசின் காப்பகங்களுக்கு தேவையான உதவிபுரிதல்.
5. இந்த டிரஸ்ட்-இன் மூலம் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று கோயில் கட்டுவது, திருப்பணி செய்வது, கோயில் விழாக்கள் நடத்துவது அன்னதானம் செய்வது மற்றும் அனைத்து தெய்வ காரியங்களிலும் ஈடுபடுவது.
  • கோவில் அமைந்துள்ள இடம்:
  • கோவில் வரலாறு:
  • கோவில் சிறப்பு:
featured
சேலம் இரயில் நிலையம் முதல் இரும்பாலை, தாரமங்கலம் செல்லும் வழியில் பால்பண்ணை பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இரட்டை கரட்டின் மேலே திருக்கோவில் அமைந்துள்ளது.
Read More
resource1
  • ஸ்ரீதேவி ,பூதேவி சமேத சென்றாய பெருமாள் சிற்பமானது ஒரே விக்கிரகத்தில் மூன்று தெய்வகங்களும் அமைந்துள்ளன.
  • பல நுற்றாண்டுகளுக்கு முன்பு அரசர்கள் சேலத்தை போர்களமாக பயன்படுத்தினர். இதை கண்ணுற்ற சேலம் சேர நட்டு பகுதியை சேர்ந்த கொங்கு நில குறுநில மன்னன் (தற்போதைய சங்கிரி, பூலாம்பட்டி, தாரமங்கலம், சேலம் கொல்லப்பட்டி, தளவாய்பட்டி மற்றும் வீரபாண்டியை உள்ளடக்கியது).
  • மஹா ஸ்ரீ ராஜ வீர விக்ரன் படை ஒன்று பல நுற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோவில் கொண்டுள்ள இடத்தில் போர்வீரர்களுடன் தங்கி-இருந்தனர். அவர்களுடன் சிற்றuசரும் தங்கி-இருந்தனர். அவருடன் சிற்றரசரும் தங்கி இருந்தனர். அவர்களின் வழிபாடிற்காக அமைக்கப்பட்டது தான் இந்த கோவில். இக்கோவில் தான் அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் தங்கி-இருந்த அரசர்கள் மற்றும் வீரர்கள் வைத்திருந்த போர்வாள் மற்றும் கத்தி ஆகியவை தற்போதும் கூட சேலம் அருங்காட்சியத்தில் உள்ளது.
featured2
  • 1. அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ள சிற்பம் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சென்றாய பெருமாள் என மூன்று தெய்வங்களும் ஒரே விக்கிரகத்தில் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
  • 2. அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோவில் வந்து சுவாமி தரிசனம் செய்து சுப கோரிக்கைகள் வைப்பதன் மூலம் பக்தர்களின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுவதுடன் அவர்களின் குடும்பம், தொழில், படிப்பு மென்மேலும் வளர்ச்சி அடைகிறது.
  • 3. இக்கோவிலின் சிறப்பு கருதி சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கோவில் மேலே செல்வதற்கு மலைப்பாதை அமைந்துள்ளது.
  • 4. தொடர்ச்சியாக மூன்று மாதம் சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு நல்ல வேலைவாய்பு கிடைக்கிறது, திருமணத் தடைகள் நீங்கி இதே கோவிலிலேயே திருமணம் நடைபெறுவது தனிச்சிறப்பு.
  • 5. வேண்டுதல் வைபவர்களுக்கு வேண்டிய வரத்தினை தந்து அருள்பாளித்து வருகிறார். பக்தர்கள் அனைவரும் திருத்தளத்திற்கு வருகை தந்து ஸ்ரீ சென்றாய பெருமாள் அருளை பெருமாறு வேண்டுகிறோம்.